சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய் சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய் இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம் இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள் சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும் தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும் செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார் திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே