சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்தம் எல்லாம் தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய் நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும் நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன் ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச் சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர் சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே