பாடல் எண் :2608
சந்ததமும் அழியாமல் ஒருபடித் தாயிலகு சாமிசிவ காமியிடமார்
சம்புவா மென்னுமறை ஆகமத் துணிவான சத்யமொழி தன்னைநம்பி
எந்தையே என்றறிஞர் யாவரும் நின்புகழை ஏத்திவினை தனைமாற்றியே
இன்பமய மாயினிது வாழ்ந்திடப் புவியினிடை ஏழையேன் ஒருவன்அந்தோ
சிந்தையா னதுகலக் கங்கொண்டு வாடலென் செப்புவாய் வேதனாதி
தேவர்முனி வர்கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர்களும் ஏவல்புரிய
அந்தணர்கள் பலகோடி முகமனா டப்பிறங் கருண்முக விலாசத்துடன்
அற்புத சிதாகாச ஞானிஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.