சந்திர சூரியர் ஒளிபெற விளங்கும் தனிஅருட் பெருவெளித் தலத்தெழுஞ் சுடரே வந்திர விடைஎனக் கருளமு தளித்தே வாழ்கஎன் றருளிய வாழ்முதற் பொருளே மந்திர மேஎனை வளர்க்கின்ற மருந்தே மாநிலத் திடைஎனை வருவித்த பதியே தந்திரம் யாவையும் உடையமெய்ப் பொருளே தனிநட ராசஎன் சற்குரு மணியே
சந்திர தரசிர சுந்தர சுரவர தந்திர நவபத மந்திர புரநட சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ