சந்தை நேர்நடை தன்னில் ஏங்குவேன் சாமி நின்திருத் தாளுக் கன்பிலேன் எந்தை நீமகிழ்ந் தென்னை ஆள்வையேல் என்னை அன்பர்கள் என்சொல் வார்களோ நிந்தை ஏற்பினும் கருணை செய்திடல் நித்த நின்அருள் நீதி ஆகுமால் தந்தை தாய்என வந்து சீர்தரும் தலைவ னேதிருத் தணிகை நாதனே