சந்தோட மாப்பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால் அந்தோ ஒருதமி யேன்மட்டும் வாடல் அருட்கழகோ நந்தோட நீக்கிய நங்காய் எனத்திரு நான்முகன்மால் வந்தோதும் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே