சமயமும் மதமும் கடந்ததோர் ஞான சபைநடம் புரிகின்ற தனியைத் தமைஅறிந் தவருட் சார்ந்தமெய்ச் சார்வைச் சத்துவ நித்தசற் குருவை அமையஎன் மனத்தைத் திருத்திநல் லருளா ரமுதளித் தமர்ந்தஅற் புதத்தை நிமலநிற் குணத்தைச் சிற்குணா கார நீதியைக் கண்டுகொண் டேனே