சரணவா ரிசம்என் தலைமிசை இன்னும் தரித்திலை தாழ்த்தனை அடியேன் கரணவா தனையும் கந்தவா தனையும் கலங்கிடக் கபமிழுத் துந்தும் மரணவா தனைக்கென் செய்குவம் என்றே வருந்துகின் றனன்மனம் மாழாந் தரணமூன் றெரிய நகைத்தஎம் இறையே அடியனை ஆள்வதுன் கடனே