சற்சபைக் குரியார் தம்மொடும் கூடித் தனித்தபே ரன்புமெய் அறிவும் நற்சபைக் குரிய ஒழுக்கமும் அழியா நல்லமெய் வாழ்க்கையும் பெற்றே சிற்சபை நடமும் பொற்சபை நடமும் தினந்தொறும் பாடிநின் றாடித் தெற்சபை உலகத் துயிர்க்கெலாம் இன்பம் செய்வதென் இச்சையாம் எந்தாய்