சற்றும்அறி வில்லாத எனையும்வலிந் தாண்டு தமியேன்செய் குற்றமெலாஞ் சம்மதமாக் கொண்டு கற்றுமறிந் துங்கேட்டுந் தெளிந்தபெரி யவருங் கண்டுமகி ழப்புரிந்து பண்டைவினை அகற்றி மற்றும்அறி வனவெல்லாம் அறிவித்தென் உளத்தே மன்னுகின்ற மெய்இன்ப வாழ்க்கைமுதற் பொருளே பெற்றுமறி வில்லாத பேதைஎன்மேல் உனக்குப் பெருங்கருணை வந்தவகை எந்தவகை பேசே