சற்றும்நற் குணந்தான் சார்ந்திடாக் கொடியார் தந்தலை வாயிலுள் குரைக்கும் வெற்றுநாய் தனக்கும் வேறுநா யாக மெலிகின்றேன் ஐம்புலச் சேட்டை அற்றுநின் றவர்க்கும் அரியநின் திருத்தாட் கடிமைசெய் தொழுகுவ னேயோ கற்றுமுற் றுணர்ந்தோர்க் கருள்தரும் ஒற்றிக் கடவுளே கருணையங்கடலே