சலங்கா தலிக்கும் தாழ்சடையார் தாமே தமக்குத் தாதையனார் நிலங்கா தலிக்கும் திருஒற்றி நியமத் தெதிரே நின்றனர்காண் விலங்கா தவரைத் தரிசித்தேன் மீட்டுங் காணேன் மெய்மறந்தேன் கலங்கா நின்றேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே