சாக்கியனார் எறிந்தசிலை சகித்தமலை சித்த சாந்தர் உளஞ் சார்ந்தோங்கித் தனித்தமலை சபையில் தூக்கியகா லொடுவிளங்கும் தூயமலை வேதம் சொன்னமலை சொல்லிறந்த துரியநடு மலைவான் ஆக்கியளித் தழிக்குமலை அழியாத மலைநல் அன்பருக்கின் பந்தருமோர் அற்புதப்பொன் மலைநற் பாக்கியங்க ளெல்லாமும் பழுத்தமலை என்னும் பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே நேரிசை வெண்பா