சாதகத் தோர்கட்குத் தானருள் வேனெனில் தாழ்ந்திடுமா பாதகத் தோனுக்கு முன்னருள் ஈந்ததெப் பான்மைகொண்டோ தீதகத் தேன்எளி யேன்ஆ யினும்உன் திருவடியாம் போதகத் தேநினைக் கின்றேன் கருணை புரிந்தருளே