சாதிமதந் தவிர்த்தவரே அணையவா ரீர் தனித்தலைமைப் பெரும்பதியீர் அணையவா ரீர் ஆதியந்தம் இல்லவரே அணையவா ரீர் ஆரணங்கள் போற்றநின்றீர் அணையவா ரீர் ஓதியுணர் வரியவரே அணையவா ரீர் உள்ளபடி உரைத்தவரே அணையவா ரீர் ஈதிசைந்த தருணமிங்கே அணையவா ரீர் என்னுடைய நாயகரே அணையவா ரீர் அணையவா ரீர்