சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே