சாமத் திரவில் எழுந்தருளித் தமியேன் தூக்கந் தடுத்துமயல் காமக் கடலைக் கடத்திஅருட் கருணை அமுதங் களித்தளித்தாய் நாமத் தடிகொண் டடிபெயர்க்கும் நடையார் தமக்கும் கடையானேன் ஏமத் தருட்பே றடைந்தேன்நான் என்ன தவஞ்செய் திருந்தேனே