சார்கலாந் தாதிச் சடாந்தமுங் கலந்த சமரச சத்திய வெளியைச் சோர்வெலாந் தவிர்த்தென் அறிவினுக் கறிவாய்த் துலங்கிய ஸோதியைச் சோதிப் பார்பெறாப் பதத்தைப் பதமெலாங் கடந்த பரமசன் மார்க்கமெய்ப் பதியைச் சேர்குணாந் தத்திற் சிறந்ததோர் தலைமைத் தெய்வத்தைக் கண்டுகொண் டேனே