சார்ந்தேநின் பால்ஒற்றி யூர்வாழும் நாயகர் தாமகிழ்வு கூர்ந்தே குலாவும்அக் கொள்கையைக் காணில் கொதிப்பளென்று தேர்ந்தேஅக் கங்கையைச் செஞ்சடை மேல்சிறை செய்தனர்ஒண் வார்ந்தே குழைகொள் விழியாய் வடிவுடை மாணிக்கமே