சாற்றவ னேகநன் னாவுள்ள தாயினும் சாற்றரிதாம் வீற்றவ னேவெள்ளி வெற்பவ னேஅருள் மேவியவெண் நீற்றவ னேநின் னருள்தர வேண்டும் நெடுமுடிவெள் ஏற்றவ னேபலி ஏற்றவனே அன்பர்க் கேற்றவனே