சாற்றுகின்ற கலைஐந்தில் பரமாதி நான்கும் தக்கஅவற் றூடிருந்த நந்நான்கும் நிறைந்தே ஊற்றுகின்ற அகம்புறமேல் நடுக்கீழ்மற் றனைத்தும் உற்றிடுந்தன் மயமாகி ஒளிர்கின்ற ஒளியே தோற்றுகின்ற கலைஉலகம் கலைஅண்ட முழுதும் துலங்குகின்ற சுடர்பரப்பிச் சூழ்கின்ற சுடரே போற்றுகின்ற மெய்அடியர் களிப்பநடித் தருளும் பொதுவில்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே