சால மாலும் மேலும்இடந் தாலும் அறியாத் தழல்உருவார் சேலும் புனலும் சூழ்ஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார் பாலுந் தேனுங் கலந்ததெனப் பவனி வந்தார் என்றனர்யான் மேலுங் கேட்கு முன்னமனம் விட்டங் கவர்முன் சென்றதுவே