சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற பெரும்பாவம் தன்னை எண்ணி நோவதின்று புதிதன்றே என்றும்உள தால்இந்த நோவை நீக்கி ஈவதுமன் றிடைநடிப்போய் நின்னாலே ஆகும்மற்றை இறைவ ராலே ஆவதொன்றும் இல்லைஎன்றால் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே