சிங்கமா முகனைக் கொன்ற திறலுடைச் சிம்புள் போற்றி துங்கவா ரணத்தோன் கொண்ட துயர்தவிர்த் தனித்தோய் போற்றி செங்கண்மால் மருக போற்றி சிவபிரான் செல்வ போற்றி எங்கள்ஆர் அமுதே போற்றி யாவர்க்கும் இறைவ போற்றி