சிதத்திலே() ஊறித் தெளிந்ததெள் ளமுதைச் சித்தெலாம் வல்லமெய்ச் சிவத்தைப் பதத்திலே பழுத்த தனிப்பெரும் பழத்தைப் பரம்பர வாழ்வைஎம் பதியை மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த மருந்தைமா மந்திரந் தன்னை இதத்திலே என்னை இருத்திஆட் கொண்ட இறைவனைக் கண்டுகொண் டேனே () சிதம் - ஞானம்