சிதத்தொளிர் பரமே பரத்தொளிர் பதியே சிவபத அனுபவச் சிவமே மதத்தடை தவிர்த்த மதிமதி மதியே மதிநிறை அமுதநல் வாய்ப்பே சதத்திரு நெறியே தனிநெறித் துணையே சாமியே தந்தையே தாயே புதப்பெரு வரமே புகற்கருந் தரமே பொதுநடம் புரிகின்ற பொருளே