சிதமலரோ சுகமலரும் பரிமளிக்க ஓங்கும் திருச்சிற்றம் பலநடுவே திருநடனம் புரியும் பதமலரோ பதமலரில் பாதுகையோ அவையில் படிந்ததிருப் பொடியோஅப் பொடிபடிந்த படியோ இதமலரும் அப்படிமேல் இருந்தவரோ அவர்பேர் இசைத்தவரும் கேட்டவரும் இலங்குமுத்தர் என்றால் நிதமலரும் நடராஜப் பெருமான்என் கணவர் நிலைஉரைக்க வல்லார்ஆர் நிகழ்த்தாய்என் தோழி