சிதம்பரத்தே ஆனந்த சித்தர்திரு நடந்தான் சிறிதறிந்த படிஇன்னும் முழுதும்அறி வேனோ பதம்பெறத்தேம் பழம்பிழிந்து பாலும்நறும் பாகும் பசுநெய்யும் கலந்ததெனப் பாடிமகிழ் வேனோ நிதம்பரவி ஆனந்த நித்திரைநீங் காத நித்தர்பணி புரிந்தின்ப சித்திபெறு வேனோ மதம்பரவு மலைச்செருக்கில் சிறந்தசிறி யேன்நான் வள்ளல்குரு நாதர்திரு உள்ளம்அறி யேனே