சித்தமனே கம்புரிந்து திரிந்துழலுஞ் சிறியேன் செய்வகைஒன் றறியாது திகைக்கின்றேன் அந்தோ உத்தமனே உன்னையலால் ஒருதுணைமற் றறியேன் உன்னாணை உன்னாணை உண்மைஇது கண்டாய் இத்தமனே யச்சலனம் இனிப்பொறுக்க மாட்டேன் இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணம் எந்தாய் சுத்தமனே யத்தவர்க்கும் எனைப்போலு மவர்க்கும் துயர்தவிப்பான் மணிமன்றில் துலங்குநடத் தரசே