சித்தியெலாந் தந்தே திருவம் பலத்தாடும் நித்தியனென் உள்ளே நிறைகின்றான் - சத்தியம்ஈ தந்தோ உலகீர் அறியீரோ நீவிரெலாம் சந்தோட மாய்இருமின் சார்ந்து