சித்தியெலாம் அளித்தசிவ சத்திஎனை யுடையாள் சிவகாம வல்லியொடு சிவஞானப் பொதுவில் முத்தியெலாந் தரவிளங்கும் முன்னவநின் வடிவை மூடமனச் சிறியேன்நான் நாடவரும் பொழுது புத்தியெலாம் ஒன்றாகிப் புத்தமுதம் உண்டாற் போலும்இருப் பதுஅதற்கு மேலும்இருப் பதுவேல் பத்திஎலாம் உடையவர்கள் காணுமிடத் திருக்கும் படிதான்எப் படியோஇப் படிஎன்ப தரிதே