சித்தெலாம் வல்ல சித்தனே ஞான சிதம்பர ஸோதியே சிறியேன் கத்தெலாம் தவிர்த்துக் கருத்தெலாம் அளித்த கடவுளே கருணையங் கடலே சத்தெலாம் ஒன்றே சத்தியம் எனஎன் தனக்கறி வித்ததோர் தயையே புத்தெலாம் நீக்கிப் பொருளெலாம் காட்டும் பொதுநடம் புரிகின்ற பொருளே