சித்தெவையும் வியத்தியுறுஞ் சுத்தசிவ சித்தாய்ச் சித்தமதில் தித்திக்குந் திருவடிகள் வருந்த மத்தஇர விடைநடந்து வந்தருளி அடியேன் வாழுமனைத் தெருக்கதவு திறப்பித்தங் கடைந்து அத்தகவின் எனைஅழைத்தென் அங்கையில்ஒன் றளித்தாய் அன்னையினும் அன்புடையாய் நின்னருள்என் என்பேன் முத்தர்குழுக் காணமன்றில் இன்பநடம் புரியும் முக்கணுடை ஆனந்தச் செக்கர்மணி மலையே