சிந்தாமணி நிதிஐந்தரு செழிக்கும்புவே னமும்ஓர் நந்தாஎழில் உருவும்பெரு நலனும்கதி நலனும் இந்தாஎனத் தருவார்தமை இரந்தார்களுக் கெல்லாம் கந்தாசிவன் மைந்தாஎனக் கனநீறணிந் திடிலே