சிந்தைக் கினியார் ஒற்றிநகர் திகழுஞ் செல்வத் தியாகர்அவர் சந்தத் தடந்தோள் கண்டவர்கள் தம்மை விழுங்க வரும்பவனி முந்தப் புகுந்து புளகமுடன் மூடிக் குளிரக் கண்டலது கந்தக் குழல்வாய்ப் பெண்ணே நான் கண்ணீர் ஒழியக் காணேனே