சினந்துரைத்தேன் பிழைகளெலாம் மனம்பொறுத்தல் வேண்டும் தீனதயா நிதியேமெய்ஞ் ஞானசபா பதியே புனைந்துரைப்பார் அகத்தொன்றும் புறத்தொன்றும் நினைத்தே பொய்யுலகர் ஆங்கவர்போல் புனைந்துரைத்தேன் அலன்நான் இனந்திருந்தி எனையாட்கொண் டென்னுள்அமர்ந் தெனைத்தான் எவ்வுலகும் தொழநிலைமேல் ஏற்றியசற் குருவே கனந்தருசிற் சுகஅமுதம் களித்தளித்த நிறைவே கருணைநடத் தரசேஎன் கண்ணிலங்கு மணியே