சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார் சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார் நினைப்பள்ளி உண்ணத்தெள் ளாரமு தளிக்கும் நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார் முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி முழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தே எனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதி என்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே