சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று திருநடஞ்செய் பெருங்ருணைச் செல்வநட ராஜன் என்மயம்நான் அறியாத இளம்பருவந் தனிலே என்னைமணம் புரிந்தனன்ஈ தெல்லாரும் அறிவார் இன்மயம்இல் லாதவர்போல் இன்றுமணந் தருளான் இறைஅளவும் பிழைபுரிந்தேன் இல்லைஅவன் இதயம் கன்மயமோ அன்றுசுவைக் கனிமயமே என்னும் கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ