சிரத்தை ஆதிய சுபகுணம் சிறிதும் சேர்ந்தி லேன்அருட் செயலிலேன் சாகா வரத்தை வேண்டினேன் வந்துநிற் கின்றேன் வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் கரத்தை நேர்உளக் கடையன்என் றெனைநீ கைவி டேல்ஒரு கணம்இனி ஆற்றேன் தரத்தை ஈந்தருள் வாய்வடல் அரசே சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே