சிரம்பெறுவே தாகமத்தின் அடிநடுவும் முடியும் செல்லாத நிலைஅதுவாய் எல்லாம்வல் லதுவாய் பரம்பரமாய்ப் பரம்பரமேற் பரவுசிதம் பரமாய்ப் பதிவெளியில் விளங்குகின்ற மதிசிவமே டையிலே தரங்குலவ அமர்ந்ததிரு வடிகள்பெயர்த் தெனது சார்படைந்தென் எண்ணமெலாம் தந்தனைஎன் அரசே குரங்குமனச் சிறியேனுக் கிங்கிதுபோ தாதோ கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே