சிரம்வளர் முதலே முதல்வளர் சிரமே சிரமுதல் வளர்தரு செறிவே தரம்வளர் நிலையே நிலைவளர் தரமே தரநிலை வளர்தரு தகவே வரம்வளர் நிறையே நிறைவளர் வரமே வரநிறை வளர்தரு வயமே பரம்வளர் பதமே பதம்வளர் பரமே பரபதம் வளர்சிவ பதியே