சிரிப்பிலே பொழுது கழிக்கும்இவ் வாழ்க்கைச் சிறியவர் சிந்தைமாத் திரமோ பொருப்பிலே தவஞ்செய் பெரியர்தம் மனமும் புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்புக் கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த எரிப்பிலே புகுவ தன்றிஎள் அளவும் இனிப்பிலே புகுகின்ற திலையே கலிநிலைத்துறை