சிறயவனேன் சிறுமையெலாம் திருவுளங்கொள் ளாதென் சென்னிமிசை அமர்ந்தருளும் திருவடிகள் வருந்தச் செறியிரவில் நடந்தணைந்து நானிருக்கு மிடத்தே தெருக்கதவந் திறப்பித்துச் சிறப்பின்எனை அழைத்துப் பிறிவிலதிங் கிதுதணைநீ பெறுகவெனப் பரிந்து பேசிஒன்று கொடுத்தாய்நின் பெருமையைஎன் என்பேன் பொறியினற வோர்துதிக்கப் பொதுவில்நடம் புரியும் பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே