சிறுநெறிக் கெனைத்தான் இழுத்ததோர் கொடிய தீமன மாயையைக் கணத்தே வெறுவிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட மெய்யநின் கருணைஎன் புகல்வேன் உறுநறுந் தேனும் அமுதும்மென் கரும்பில் உற்றசா றட்டசர்க் கரையும் நறுநெயுங் கலந்த சுவைப்பெரும் பழமே ஞானமன் றோங்கும்என் நட்பே