சிறுவயதில் எனைவிழைந்தீர் அணையவா ரீர் சித்தசிகா மணியேநீர் அணையவா ரீர் உறுவயதிங் கிதுதருணம் அணையவா ரீர் உண்மைசொன்ன உத்தமரே அணையவா ரீர் பொறுமைமிக உடையவரே அணையவா ரீர் பொய்யாத வாசகரே அணையவா ரீர் இறுதிதவிர்த் தாண்டவரே அணையவா ரீர் என்னுடைய நாயகரே அணையவா ரீர் அணையவா ரீர்