சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு
சிற்சபையும் பொற்சபையும் சித்தி விளக்கத்தால் நற்சகமேல் நீடூழி நண்ணிடுக - சற்சபையோர் போற்றிவரம் பெற்றுவகை பூரிக்க வாழ்ந்திடுக நாற்றிசையும் வாழ்க நயந்து