சிற்பதமும் தற்பதமும் பொற்பதத்தே காட்டும் சிவபதமே ஆனந்தத் தேம்பாகின் பதமே சொற்பதங்கள் கடந்ததன்றி முப்பதமும் கடந்தே துரியபத முங்கடந்த பெரியதனிப் பொருளே நற்பதம்என் முடிசூட்டிக் கற்பதெலாங் கணத்தே நான்அறிந்து தானாக நல்கியஎன் குருவே பற்பதத்துத் தலைவரெலாம் போற்றமணி மன்றில் பயிலும்நடத் தரசேஎன் பாடல்அணிந் தருளே