Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1589
சிற்றம் பலத்தார் ஒற்றிநகர் 

திகழுஞ் செல்வத் தியாகர்அவர் 
உற்றங் குவந்தோர் வினைகளெலாம் 

ஓட நாடி வரும்பவனி 
சுற்றுங் கண்கள் களிகூரத் 

தொழுது கண்ட பின்அலது 
முற்றுங் கனிவாய்ப் பெண்ணேநான் 

முடிக்கோர் மலரும் முடியேனே
பாடல் எண் :4816
சிற்றம் பலத்தைத் தெரிந்துகொண் டேன்எம் சிவன்அருளால் 
குற்றம் பலவும் தவிர்ந்துநின் றேன்எண் குணக்குன்றிலே 
வெற்றம்பல் செய்தவர் எல்லாம் விரைந்து விரைந்துவந்தே 
நற்றம் பலம்தரு வாய்என்கின் றார்இந்த நானிலத்தே
பாடல் எண் :5033
சிற்றம் பலத்தில் நடங்கண் டவர்காற் பொடிகொள் புல்ல தே 
சிருட்டி முதல்ஓர் ஐந்து தொழிலும் செய்ய வல்ல தே 
பற்றம் பலத்தில் வைத்தார் தம்மைப் பணியும் பத்த ரே 
பரம பதத்தர் என்று பகர்வர் பரம முத்த ரே  எனக்கும் உனக்கும்
பாடல் எண் :5057
சிற்றம் பலத்தின் நடனம் காட்டிச் சிவத்தைக் காட்டி யே 
சிறப்பாய் எல்லாம் வல்ல சித்தித் திறத்தைக் காட்டி யே 
குற்றம் பலவும் தீர்த்தென் தனக்கோர் முடியும் சூட்டி யே 
கோவே நீயும் என்னுள் கலந்து கொண்டாய் நாட்டி யே  எனக்கும் உனக்கும்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.