சிற்றிடைஎம் பெருமாட்டி தேவர்தொழும் பதத்தாள் சிவகாம வல்லியொடு சிறந்தமணிப் பொதுவில் உற்றிடைநின் றிலங்குகின்ற நின்வடிவைக் கொடியேன் உன்னுதொறும் உளம்இளகித் தளதளஎன் றுருகி மற்றிடையில் வலியாமல் ஆடுகின்ற தென்றால் வழியடியர் விழிகளினால் மகிழ்ந்துகண்ட காலம் பற்றிடையா தாங்கவர்கட் கிருந்தவண்ணந் தனையார் பகர்வாரே பகர்வாரேல் பகவன்நிகர் வாரே