சிவயோக சந்திதரும் தேவிஉல குடையாள் சிவகாம வல்லியொடுஞ் செம்பொன்மணிப் பொதுவில் நவயோக உருமுடிக்கண் விளங்கியநின் வடிவை நாய்க்கடையேன் நான்நினைத்த நாள்எனக்கே மனமும் பவயோக இந்தியமும் இன்பமய மான படிஎன்றால் மெய்யறிவிற் பழுத்தபெருங் குணத்துத் தவயோகர் கண்டவிடத் தவர்க்கிருந்த வண்ணம் தன்னைஇந்த வண்ணம்என என்னை உரைப்பதுவே